Skip to main content

Posts

குருவருள் நம்மைத் தேடி ......

  சிவாயநம, அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி என்னும் தாயுமானவரின் வரிகளுக்கு ஏற்ப இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான். இவ்வாறு பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் இறைவனின் மூலம் எது? அறிவியல், பிரபஞ்சத்தின் மூலம்(Origin) நெருப்பு என்று பிக் பேங் தியரி மூலம் சொல்கிறது. நம்முடைய ஆன்மீகமும் இறைவனின் மூலம் (Origin) நெருப்பு என்று திரும்பத் திரும்ப சொல்கிறது. இறைவனின் மூலம் என, மிக கம்பீரமாக எழுந்து நிற்பது நம்முடைய அருணாச்சல மலை. 12 ஜோதிர்லிங்கங்கள் இருக்க ஏன் திருவண்ணாமலை இறைவனின் மூலம் என்று இங்கு சொல்லப்படுகிறது? இறைவனின் மூலம், ஆண் பெண் தன்மை கொண்டது. அதனை நமக்கு உணர்த்தும் வண்ணம் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் அன்று மாலை 6 மணி அளவில் இறைவன் அர்த்தநாரீஸ்வரராக மிகச் சிறிது நேரம் எழுந்தருளுகிறார். இந்த அர்த்தநாரீஸ்வரர்தான் பரப்பிரம்மம். இந்த பரப்பிரம்மத்தை சிவ சக்தி என்றும் அழைக்கலாம். சிவசக்தி என்று அழைக்கப்படும் அர்த்தநாரீஸ்வர ஸ்வரூபமான நெருப்பிலிருந்து அனைத்து உயிர்களும் உருவாகின. சக்தி என்றும் அழைக்கப்படும் பெண் தன்மையிலிருந்துதான் அனைத்து தெய்வங்களும் உர
Recent posts

ஆன்மா குறித்து இறைவனின் வழிகாட்டுதல் ! - பகுதி 1

  செஞ்சி பாணம் பாக்கம் கைலாசநாதர் கோவில், திருப்பணி மூலம் இறைவன் எத்தனை எத்தனை ஆன்மாக்களை மனநிறைவு என்கின்ற ஒரு விஷயத்தை நோக்கி பயணம் செய்யுமாறு திசைதிருப்பி விட்டிருக்கிறார் என்பதை பதிவு செய்ய ஆசைப்பட்டதால் இந்த ஒரு பதிவு.. அவ்வாறு பதிவு செய்யும் முன்னர், ஆன்மா என்பது குறித்து சில விஷயங்களை பேசுவோம், பிறகு கடவுள் எவ்வாறு நமக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறார் நம்முடன் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்பதை பார்ப்போம்.  மனதில் உணர்ந்த அத்தனை விஷயங்களையும்  வார்த்தைகளால் கொண்டுவர முடியுமா என்றால் தெரியவில்லை ஆனால் இங்கே ஒரு முயற்சியை மேற்கொள்ளலாம் என்கின்ற எண்ணத்தில் இந்த பதிவு பதிவிடப்படுகிறது. இந்தப் பதிவு வாட்ஸப்பில் மிகப்பெரிய பதிவாக இருக்கும் என்பதினால் இதனை இணையதளத்தில் பதிவு செய்து அதற்குரிய இணையதள லிங்க் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் அனைத்து விஷயங்களையும் கொடுக்க முடியாது என்பதினால் முடிந்த போதெல்லாம் பதிவு செய்து அதற்குரிய இணையதள லிங்க் குழுவில் பகிர்ந்து கொள்ளப்படும். இந்தப் பதிவின் மூலம் ஏதேனும் ஒரு சில அடியவர்களுக்கு ஆன்மா குறித்த ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது என்றால் அது தா

குருவின் தேவை!

ஓம் மகா கணபதி போற்றி ஓம் சாய் போற்றி ஓம் நமசிவாயா இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் சிவபுராணம் விளக்கம் எனது குரு சீரடி சாய் அவர்களின் வழிகாட்டுதலுடன் தமிழ் அகராதி உதவியுடனும் எழுதப்பட்ட ஒரு விளக்கம்! ஒரு சொம்பு தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் இரண்டு கை நிறைய உப்பை போட்டு கலக்குவோம். இப்பொழுது அந்த உப்பு எங்கே என்றால் என்று கேட்டால் தண்ணீரில் இருக்கிறது என்று சொல்வோம். அந்த உப்பை இப்பொழுது காட்ட முடியுமா அல்லது போட்ட இரண்டு கையில்  உப்பிலிருந்து ஒரு கை கொடுக்க முடியுமா  என்றால் முடியாது, ஏனெனில் அது தண்ணீரில் கரைந்து விட்டது. தண்ணீரில் கரைந்து விட்ட அந்த உப்பை பார்ப்பது கடினம், ஆனால் அந்த உப்பின் தன்மையை உணர முடியும். அந்த தண்ணீரை எடுத்து சுவைத்து பார்த்தால் அந்த உப்பின் தன்மையை உணர முடியும். இறைவனும் தண்ணீரில் கலந்து விட்ட அந்த உப்பு போல்தான்! அவனை உணரத்தான் முடியும்! இறைவனை நாம் உணர்வதற்கு நமக்கு ஒரு வழிகாட்டி தேவை. யார் அந்த வழிகாட்டி என்பதை திருமுருக கிருபானந்த வாரியாரின் ஒரு குட்டிக் கதை மூலம் பார்ப்போம். கடவுளைக் கண்ணால் காண முடியுமா….? என்று ஒரு மாணவன் வாரியாரை பார்த்து கேட்டான். “உன்
April 2021 Contribution as per bank statement   சிவாய நம ஏப்ரல் மாதத்தில் நம்முடைய குழு அடியவர்களால் கொடுக்கப்பட்ட நன்கொடை தொகை, வங்கிக் கணக்கில் பட்டியல் படி கொடுக்கப்பட்டிருக்கிறது. வங்கிக் கணக்கு பட்டியல் படி கொடுக்கப்பட்டிருப்பதால் எந்தக் கணக்கில் இருந்து அடியவர்கள் பணம் அனுப்பினார்கள் அந்த கணக்கின் பெயர் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும். சில அடியவர்கள் தங்களுடைய நண்பர்கள் உறவினர்கள் மூலம் அனுப்பி இருப்பார்கள். அந்த நண்பர்கள் உறவினர்களின் பெயர்தான் வங்கிக் கணக்கில் இருக்கும். எனவே அவர்களின் பெயர்தான் இந்த பட்டியலில் இருக்கும். இந்தப் பட்டியல் அடியவர்கள் அனைவரும் அனுப்பிய நன்கொடை தொகை வந்து சேர்ந்து விட்டது என்று தெரிய படுத்துவதற்கான வங்கிக் கணக்கு பட்டியல். சிவாய நம                   30/04/2021        V MATHIVANAN        116 30/04/2021        V MATHIVANAN        1,000.00 30/04/2021        PRAVEEN KUMAR M        101 30/04/2021        SATHISH KUMAR R        1,116.00 30/04/2021        SURESH KUMAR B        200 30/04/2021        SKOTHAND        1,116.00 30/04/2021        Mr SWAM