சிவாயநம,
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி என்னும் தாயுமானவரின் வரிகளுக்கு ஏற்ப இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான். இவ்வாறு பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் இறைவனின் மூலம் எது? அறிவியல், பிரபஞ்சத்தின் மூலம்(Origin) நெருப்பு என்று பிக் பேங் தியரி மூலம் சொல்கிறது. நம்முடைய ஆன்மீகமும் இறைவனின் மூலம் (Origin) நெருப்பு என்று திரும்பத் திரும்ப சொல்கிறது. இறைவனின் மூலம் என, மிக கம்பீரமாக எழுந்து நிற்பது நம்முடைய அருணாச்சல மலை. 12 ஜோதிர்லிங்கங்கள் இருக்க ஏன் திருவண்ணாமலை இறைவனின் மூலம் என்று இங்கு சொல்லப்படுகிறது? இறைவனின் மூலம், ஆண் பெண் தன்மை கொண்டது. அதனை நமக்கு உணர்த்தும் வண்ணம் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் அன்று மாலை 6 மணி அளவில் இறைவன் அர்த்தநாரீஸ்வரராக மிகச் சிறிது நேரம் எழுந்தருளுகிறார். இந்த அர்த்தநாரீஸ்வரர்தான் பரப்பிரம்மம். இந்த பரப்பிரம்மத்தை சிவ சக்தி என்றும் அழைக்கலாம். சிவசக்தி என்று அழைக்கப்படும் அர்த்தநாரீஸ்வர ஸ்வரூபமான நெருப்பிலிருந்து அனைத்து உயிர்களும் உருவாகின. சக்தி என்றும் அழைக்கப்படும் பெண் தன்மையிலிருந்துதான் அனைத்து தெய்வங்களும் உருவாகின. சக்தியானவள் தாய்மை அடைந்து இருந்தபொழுது, கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படுவதுபோல், சக்திக்கு வினோத ஆசை ஏற்பட்டது. தான் முழுக்க முழுக்க ஆண் உருவமாக இருந்தால் எப்படி இருக்கும்? என்பதுதான் அந்த ஆசை. சிவன் அவளுடைய ஆசைப்படி அப்படியே ஆகட்டும் என்று சொல்ல, சக்தி எடுத்த ஆண் உருவம் தான் மகாவிஷ்ணு. எனவே ஆதிபராசக்தியும், மகாவிஷ்ணுவும் சகோதர சகோதரிகள். மகாவிஷ்ணுவின் கைகளில் சங்கு சக்கரம் இருப்பதுபோல், ஆதிபராசக்தி கைகளில், சங்கு சக்கரம் இருப்பதை நாம் பார்த்திருக்கலாம். ஆக சக்தியின் ஆண்தன்மை மகாவிஷ்ணு, பெண்தன்மை ஆதிபராசக்தி. ஆதிபராசக்தி தாய்மை அடைந்திருந்த பொழுது விஷ்ணுவாக மாறியதால் குழந்தை விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து வெளிவந்தது அந்த குழந்தை தான் பிரம்மா. பிறகு பிரம்மா விலிருந்து ருத்திரன் மற்றும் சப்தரிஷிகள் வந்தனர்.
ஆதிபராசக்தி விஷ்ணுவாக வடிவெடுத்தது போல் பல்வேறு யுகங்களில் பல்வேறு வடிவம் எடுத்தாள். ஆதிபராசக்தி ஒரு சமயத்தில் விநாயகராக வடிவெடுத்தாள். விநாயகரின் வடிவமான தும்பிக்கை மற்றும் பெரிய காதுகள், ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்கு சாட்சியாக இருக்கிறது. விநாயகரின் பெரிய காதுகள் மற்றும் தும்பிக்கை, நம்முடைய தமிழ் மந்திரத்தின் “ஓ” போல இருப்பதை நம்மால் உணர முடியும். தும்பிக்கையில் இருக்கும் பழம் “ம்" ஐ குறிக்கிறது. அதுமட்டுமன்றி விநாயகரின் மிகப்பெரிய வயிறு, பிரளய காலத்தில் உலகத்தை உள்ளடக்கி பாதுகாக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.
பிறவிப் பெருங்கடலை ஆன்மாக்கள் நீந்தி எப்பொழுது கடந்து வரும்? என்று நமக்காக சிவ ஸ்வரூபம் ஏக்கத்துடன் காத்திருக்க, சக்தியானவள் ஆன்மாக்கள் பிறவிக் கடலை கடப்பதற்கு உதவி செய்ய எடுத்த அவதாரம்தான் குரு அவதாரம். அப்படி எடுக்கப்பட்ட ஒரு அவதாரம்தான் தத்தாத்ரேயர். ஆதிபராசக்திதான் தத்தாத்ரேயர், தத்தாத்ரேயர் தான் ஆதிபராசக்தி என்று நமக்கு உணர்த்தும் வண்ணம், பல்வேறு வகையில் ஸ்ரீ சக்கரம் நமக்கு காண்பிக்கப்பட்டது. தத்தாத்ரேயரை பிரதிஷ்டை செய்யும் பொழுது ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மே 26-ஆம் தேதி மகா பெரியவர் சரித்திரம் மூலமாக திருவானைக்காவல் அன்னையின் காதுகளில் உள்ள தாடங்கம் வழியாக ஸ்ரீசக்கரத்தின் மகிமை உணர்த்தப்பட்டது. அது மட்டுமன்றி பல்வேறு விதங்களில் ஸ்ரீசக்ரம் நமக்கு காண்பிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி ஸ்ரீசக்ர தத்தாத்ரேயர் என்கின்ற மந்திரத்தை தினமும் ஜெபிக்க நமக்கு இறை அருளால் உணர்த்தப்பட்டது. அதுமட்டுமன்றி மே 26 ஆம் தேதி அகத்தியர் வாக்கு மூலம், ஒருவருக்கு வாழ்க்கையில் குருதான் அனைத்துமாய் இருக்கிறார் என்பது உணர்த்தப்பட்டது. ஜீன் 26 ஆம் தேதி வெளிவந்த அகத்தியர் வாக்கு முழுமையாக கீழே கொடுக்கப்படுகிறது.
🌸இன்றைய "தினம் அகத்தியர் வாக்கு" :🌸
நாள் : 65
🌸தேதி : 26-06-2021 (சனி - கரி, காரி, கரியன், மந்தன்)
🌸அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?
சுதேவனுடைய பிணம் தின்னும் சாபத்தை பாேக்கியவர் அகத்திய மாமுனிவர்.
🌸கேள்வி : பாேகர் (பழனி முருகப்பெருமானின் நவபாஷாண சிலையை வடிவமைத்த சித்தர்) மற்றவர்களைவிட தங்களின் தலைசிறந்த சீடர் ஆனதற்கு பின்னணி என்ன? 🙏
அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :
🌸இறைவன் அருளாலே தலை சிறந்தவர் என்றால் உடல் சிறந்தவரல்ல, உள்ளம் சிறந்தவரல்ல என்று (மனிதர்கள்) பாெருள் காெண்டுவிடப் பாேகிறார்களப்பா. பாேகர் மட்டும் அல்லாமல் வெளி மனிதர்களால் அறிந்து காெள்ள முடியாத எண்ணற்ற பல சீடர்கள் இருக்கிறார்கள். யாமாே எல்லாேரையும் எம் சீடர்களாகவும், சிஷ்யர்களாகவும்தான் பார்க்கிறாேம். ஆனாலும் மனிதனை பிடித்துள்ள மாயை எம்மை நாேக்கி வரவிடுவதில்லை.
🌸ஆயினும்கூட பாேகரிடம் உள்ள சிறப்பு என்னவென்றால் எம் பாேன்ற பல மகான்களிடம் தான் எத்தனையாே கற்றாலும்கூட கல்லாததுபாேல, ஒன்றும் தெரியாதது பாேல இருந்துகாெண்டு, அனைத்தையும் அறிந்து காெண்டு, அப்பாெழுதும் 'ஒன்றும் தெரியவில்லை குருவே! நீங்கள் சாென்னால்தான் எனக்கு புரியும்' என எப்பாெழுதுமே கூறிக்காெண்டு இருக்கக்கூடிய ஒரு நிலையிலே.... அஃதாேடு மட்டுமல்லாமல் நல்விதமாய் இஃதாெப்ப தெய்வ சக்திகளையும், சித்திகளையும் இவன் அடைந்தாலும்கூட மனித சக்தி பாேல ஒன்றும் அறியாதது பாேல ஒவ்வாெரு மூலிகையையும் தேடி சென்று சுயமாக பரிசாேதனை செய்து பார்த்து, பார்த்து, பார்த்து, பார்த்து எத்தனையாே நாேய்களுக்கு மருந்து கண்டிருக்கிறான்.
🌸72,000 நாடி, நரம்புகளும் நன்றாக இயங்குவதற்குண்டான உடல் இயக்க முறைகளையும், சுவாச முறைகளையும் கற்றுணர்ந்ததாேடு மலர் மருத்துவத்தையும் முதன்முதலாக மனித குலத்திற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறான். மலர் மருத்துவத்தாேடு மட்டுமல்லாமல் நறுமண மருத்துவ முறையையும் இவன் அறிமுகப்படுத்தியிருக்கிறான். இன்னின்ன நறுமணத்தை, இன்னின்ன பிணியாளர்கள், இன்னின்ன கிரக நிலையிலே நுகர்ந்தால் இன்னின்ன பிணிகள் பாேகும் என்பதெல்லாம் அவனுடைய சுய ஆய்வின் முடிவாகும்.
🌸எங்கள் உதவியாே, இறை உதவியாே இருந்தாலும்கூட அவற்றைப் பயன்படுத்தாமல் சுயமாகவே பலவற்றைக் கற்றுத் தேர்ந்து, அனைத்தையும் கற்றுவிட்டு, எந்தவிதமான தகுதியும் தனக்கில்லை என்பது பாேலதான் எப்பாெழுதுமே நடந்து காெள்வான். ஏதாவது சிறிய விஷயத்தைக் கேட்டால்கூட 'தெரியாது குருதேவா! நீங்கள் சாென்னால் தெரிந்து காெள்கிறேன்' என்றுதான் எப்பாெழுதுமே அவன் கூறிக்காெண்டிருப்பான்.
🌸ஒருநாள் யாம் (அகத்திய மாமுனிவர்) கேட்டாேம் பாேகனிடம், பல சித்தர்கள் இருக்க
பாேகனே! அன்னை துர்க்கையைத் தெரியுமா?".
பதில் : தெரியாது"
பாேகனே! முக்கண்ணனைத் தெரியுமா?".
பதில் : தெரியாது".
பாேகனே! இளையவன் பாலன் முருகனை தெரியுமா?"
பதில் : தெரியாது".
🌸இவன் ஏன் இப்படி கூறுகிறான் என்று எல்லாேரும் திகைக்கிறார்கள். பழனி முருகனை வடிவமைத்துவிட்டு "எனக்கு முருகனைத் தெரியாது" என்று கூறுகிறான்.
சரி, ஏதாவது ஒரு மூலிகையைக் காட்டி,
இது குறித்து உனக்கு ஏதாவது தெரியுமா?"
பதில் : தெரியாது".
🌸இப்படியே எல்லாேரும் ஒவ்வாென்றாக கேட்டுக் காெண்டே வர, "என்னதான் உனக்குத் தெரியும்" என்று கேட்டால்,
"குருவே! உங்களைத்தான் தெரியும். வேறு எதுவும் தெரியாது" என்று கூறுகிறான்.
🌸சாெல்லப்பா! இவன் (பாேகர் சித்தர்) தலை சிறந்த சீடனாகாமல் வேறு எவன் ஆவான்.
🙏 -சுபம்-🙏
🌸ஓம் லாேபாமுத்திரா தேவி சமேத அகத்தியர் திருவடிகள் பாேற்றி!🙏
குரு திருவடி சரணம்!🙏
🌸குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும், தஞ்சாவூர் சித்தர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு (ஒரு சில வருடங்களுக்கு முன்).
16 சித்தர்களில் ஒருவரான போகர், பழநியிலுள்ள நவபாஷாண முருகனை உருவாக்கினார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அகத்தியர் வாக்குப்படி வந்திருக்கும் இந்த பதிவில் போகர் தனக்கு முருகனை தெரியாது, வேறு எந்த கடவுளையும் தெரியாது, தனக்கு தெரிந்ததெல்லாம் குரு ஒன்றுதான் என்று சொல்கிறார். அதுமட்டுமன்றி இந்த பதிவு இன்று எழுத வேண்டும் என்று முடிவெடுத்த போது திரும்பவும், அகத்தியர் கீழே உள்ள ஒரு படம் மூலம் வந்து இன்றைய பதிவை எழுதும் படி தூண்டினார். அதுமட்டுமன்றி மகாதிருவாசகம் பிரார்த்தனை பதிவில் குருவின் அருள் வேண்டி என்று பிரார்த்தனை போடப்பட்டது.
இறையருளால் தற்பொழுது சமஸ்கிருத அகராதி கொண்டு இந்த சகஸ்ரநாமம் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மொழிபெயர்க்க பெயர்க்க, இதனை நம்முடைய குழு அடியவர்களுக்காக, நம்முடைய இணையதளத்தில் பதிவிடப்படும்.
இந்தப் சகஸ்ரநாமம் மிக மிக மிக மிக மிக மிக மிக முக்கியமான ஒரு விஷயமாகும். ஏனெனில் போகர் அகத்தியரிடம் சொன்னதுபோல், ஒருவருக்கு குரு என்பவர் மிக மிக முக்கியம். போகர் சொன்னதுபோல், உலகில் அனைத்துமே குருவாக இருக்கிறார் என்பதை இந்த சகஸ்ரநாமம் உணர்த்துகிறது. பரம்பரம் எனப்படும் பானம்பாக்கம் கோவில் திருப்பணி வழியாக தத்தாத்ரேயர் நம்முடைய வாழ்வில் எழுந்தருளினார். தற்பொழுது அவருடைய முதல் அவதாரமான ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் சகஸ்ரநாமம் மூலம், இதுவரை நாம் உணராத பல்வேறு விஷயங்களை நமக்கு உணர்த்த வந்திருக்கிறார். இறைவன் என்கின்ற விஷயத்தைப் பொருத்தவரை குரு என்கின்ற ஒருவரால் மட்டும்தான் இறைவனை நமக்கு உணர்த்த முடியும். அவ்வாறு உணர இறைவன் திருவருள் நமக்கு தேவை. தற்பொழுது மண்டல பாராயணம் ஆக நாம் செய்துகொண்டிருக்கும் திருப்பள்ளியெழுச்சி நமக்கு குருவருளை உணர்த்தக்கூடிய ஒரு கருவியாக இருக்கும் என்று மனப்பூர்வமாக நம்புகிறோம். குருவின் அருள் இந்த சகஸ்ரநாமத்தை உணர்ந்து படிக்கும் பொழுது அனைவருக்கும் கிடைக்கும் என மனப்பூர்வமாக நம்புகிறோம்.
சகஸ்ரநாமம் மொழிப்பெயர்ப்பு விளக்கம், நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் நாளையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பதிவிடப்படும். அதற்கான இணைய தளம் லிங்க் நம்முடைய குழுவில் போடப்படும்.
சிவாய நம
Comments
Post a Comment