Skip to main content

குழும விபரங்கள்

 

நோக்கம்: 


ஊர் கூடி சீரமைப்போம் என்பது இறைவன் திருவருளால்,  அகத்திய மாமுனிவர், அவருடைய வாக்குகளால் வழிகாட்ட , தொடங்கப்பட்ட ஒரு வாட்ஸ்அப் குழுமம்ஆலய திருப்பணி செய்ய ஆயிரம் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் மாறவேண்டும் என்பதுதான் நம்முடைய ஊர்கூடி சீரமைப்போம் குழுமத்தின் முக்கிய நோக்கம். தனிப்பட்ட சில நபர்கள் ஆயிரமாயிரமாய் கொடுப்பதைவிட, ஆயிரமாயிரம் அடியவர்கள் ஒன்று சேர்ந்து சில நூறு ரூபாய்கள் கொடுத்தால் ஆலயத் திருப்பணி மிக அற்புதமாக நடைபெறும். எத்தனை எத்தனை பழமையான கோவில்கள் மிக சிதிலமடைந்த நிலையில் இருப்பது கண்டு நாம் அனைவரும் வருத்தப்படுகிறோம். அதற்காக நாம் என்ன செய்யமுடியும் என்று நினைத்து விட்டு விடுகிறோம். இனி அவ்வாறு கடந்து செல்லாமல், அனைவரும் சேர்ந்தால் சிதிலமடைந்த பழமையான கோவில்களை சீர்செய்து, நித்திய பூஜை நடைபெற செய்யமுடியும் என்ற நம்பிக்கை கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு இறைவனுக்கு தொண்டு செய்வதன் மூலம் நம்முடைய 

ஆன்ம நலனும் பாதுகாக்கப்படுகிறது. உடலை விட்டு உயிர் பிரியும் பொழுது நம்மால் நாம் சேர்த்து வைத்த பொருட்களை எடுத்துச் செல்ல இயலாது ஆனால் நாம் செய்த அத்தனை பாவ புண்ணியங்களும் நம் ஆன்மாவில் பதிவு செய்யப்படுகிறது.  நாம் செய்யும் இந்த ஆலயத் திருப்பணிகள் நம்முடைய கர்ம வினைகளின் பாதிப்பிலிருந்து காக்கும் ஒரு கவசமாக அமையும்.



செயல்படும் விதம் :


ஊர் கூடி சீர் அமைப்போம்  குழுவிற்காக யுனைட்டெட் ஹேண்ட்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் என்கின்ற ட்ரஸ்ட், இறைவன் அருளால் முறையாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ட்ரஸ்டுக்கு உரிய வங்கிக் கணக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


United hands charitable trust

Acc no 6640000100023837

IFSC  PUNB0664000

Branch Virudhunagar


டிரஸ்டின் இந்த வங்கிக் கணக்கில் ஆலய சீரமைப்புக்காக பங்களிப்பை வழங்கும் அனைத்து அடியவர்களின் பெயர் மற்றும் பங்களித்த பணத்தின் விபரங்கள் முறையாக இங்கே இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்படும். அதுமட்டுமன்றி மாதம் இருமுறையோ அல்லது அதற்கு மேலோ, வங்கிக்கணக்கு சம்பந்தமான ஆவணங்களும் அனைவருக்கும் தெரியும்படி இங்கு பதிவு செய்யப்படும். ஊர் கூடி சீர்அமைப்போம் வாட்ஸ்அப் குழுமத்தை நடத்தும் அடியவர்கள், இறைவனின் வழிகாட்டுதல் உடனும், கர்ம வினைகள் பற்றியும், கர்மவினைகள் எவ்வாறு பிறவி பிறவியாக தொடர்ந்து வந்து வாட்டும் என்பதை பரிபூரணமாக உணர்ந்து இருப்பதாலும், பணம் சம்பந்தப்பட்ட விஷயமாக இருப்பதால் வெளிப்படைத் தன்மை மிக மிக அவசியமாக இருக்கிறது என்பதை உணர்ந்தாலும், டிரஸ்டின் வரவு கணக்கு, செலவு கணக்கு போன்றவைகள் மிக வெளிப்படையாக இந்த இணையதளத்தில் முறையாக பதிவு செய்யப்படும்.



குழுமத்தின் அடித்தளமாக இருந்து  இறைவன் பணித்த இந்த திருப்பணியை செய்பவர்கள்:


வள்ளி திருமுருகன், சித்ரா சேகர் அம்மா அவர்கள், வள்ளியம்மை அம்மா அவர்கள், லஷ்மி முத்துகுமார், உஷா சுரேஷ், ஆனந்தி ராம்குமார் மற்றும் சாய்குமார் அவர்கள்



ஆலயத் திருப் பணி செய்வதினால் கிடைக்கும் நன்மையை விளக்கும் ஒரு பதிவு :


அவர் ஒரு பிரபல ஜோதிடர்


அவர் ஒருவருடைய ஜாதகத்தை கணித்து ஒரு விஷயத்தை சொன்னால், அது அந்த பிரம்மாவே சொன்னது போல.! அந்தளவு ஜோதிடத்தில் பாண்டியத்மும் நிபுணத்துவமும் பெற்றவர். எனவே அவரை சந்தித்து தங்கள் எதிர்கால பலன்களை தெரிந்துகொள்ள பல ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் வருவார்கள்


தனது எதிர்காலம் குறித்தும் மிகவும் கவலை கொண்ட ஒரு ஏழை கூலித் தொழிலாளி அந்த ஜோதிடரை சந்திக்க வந்தான்.


நான் மிகவும் வறுமையில் இருக்கிறேன். கடன் பிரச்சனை வேறு என்னை வாட்டுகிறது. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் வேறு. அவர்களை எப்படி கரையேற்றப் போகிறேன் என்று தெரியவில்லை. நான் நன்றாக வாழ ஏதாவது வழி இருக்கிறதா? என்று என் ஜாதகத்தை பார்த்துச் சொல்லுங்கள்என்று தன் ஜாதகத்தை கொடுத்தார்.


ஜோதிடரும் அந்த ஏழை தொழிலாளியின் ஜாதகத்தை கணிக்கத் தொடங்கினார். சோழிகளை உருட்டிப்போட்டார். கட்டங்களாய் ஆராய்ந்தார். ஒரு கட்டத்தில் ஜோதிடரின் முகம் சுருங்கியது.


பிறகு தொழிலாளியிடம், “ஐயா எனக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான பணி ஒன்று இருக்கிறது. உங்கள் ஜாதகத்தை சற்று விரிவாக ஆராயவேண்டி இருக்கிறது.  


எனவே அது என்னிடம் இருக்கட்டும். நீங்கள் இன்று போய் நாளை இதே நேரத்திற்கு வாருங்கள். நான் உங்களுக்கு அனைத்தையும் சொல்லிவிடுகிறேன்என்றார்.


சரிங்க ஐயா நான் நாளைக்கு வர்றேன். இப்போ பார்த்ததுக்கு எதாச்சும் தரணுமா ஐயா?” என்று ஜோதிடரிடம் கேட்டார்.


அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்நாளைக்கு வரும்போது கொடுங்க போதும்…”


ரொம்ப நன்றிங்க ஐயாநான் நாளைக்கு வர்றேன்…”


தொழிலாளி அங்கிருந்து புறப்பட்டார்.


அப்போது அங்குவந்த ஜோதிடரின் மூத்த மகள், “”அப்பாஏன் அவர்கிட்டே அவசர வேலை இருக்குன்னு சொல்லி அனுப்பினீங்க? இன்னைக்கு எனக்கு வேலை எதுவும் இல்லை. முழுக்க முழுக்க வர்றவங்களுக்கு ஜாதகம் தான் பார்த்து பலன் சொல்லப்போறேன்னு சொன்னீங்க?” என்று கேட்டாள்.


அதற்கு ஜோதிடர், “அம்மாஅவரது ஆயுட்காலம் இன்றிரவு முடியப்போகிறது. அவரது ஜாதகம் உணர்த்துவது அதைத் தான். மேலும் சோழி உருட்டிகூட பார்த்துவிட்டேன்.  


பரிகாரம் செய்வதற்கு கூட அவருக்கு அவகாசம் இல்லை. இதை அவரிடம் தெரிவிக்க மனமில்லை. அதனால்தான் பொய் சொல்லி அவரை இங்கிருந்து அனுப்பினேன்பாவம்…” என்றார்.


இதற்கிடையில் அந்த தொழிலாளி தனது ஊரைநோக்கி வயல்வெளிகளுக்கு இடையே நடந்து கொண்டிருந்தார்.


அப்போது திடீரென வானம் மேகமூட்டமாகி இருள் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் மழைதூற ஆரம்பித்து வலுப்பெற்று, இடியுடன் பலத்த மழை கொட்டியது.


வயல்வெளிக்குள் ஒதுங்க இடமின்றி, ஓட்டமும் நடையுமாக அந்த தொழிலாளி விரைந்து நடக்க ஆரம்பித்தான். சற்று தூரத்தில் ஏதோ ஒரு ஆள் அரவமற்ற கோவில் போன்ற கட்டிடம் ஒன்று தென்பட, அதை நோக்கி ஓடினான் தொழிலாளி.


அது ஒரு பாழடைந்த சிவன் கோவில். அங்குசென்று மழைக்கு ஒதுங்கினான் அந்த தொழிலாளி.


மண்டபத்தில் நின்றிருந்த அவர் சிதிலமடைந்து கிடக்கும் கோவிலின் நிலைமையைக் கண்டு மிகவும் வருந்தினார். “ஈசன் குடியிருக்கும் கோவில் இப்படி கவனிப்பாரற்று சிதிலமடைந்து காணப்படுகிறதேநான் மட்டும் ஏழையாக இல்லாமல் பணவசதியுடன் இருந்தால் இந்த கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துவிடுவேன்என்று நினைத்துக்கொண்டார்.


அத்துடன் அவர் மனஓட்டம் நிற்காமல் சிவன் கோவிலை தான் புதுப்பிப்பதாக மானசீகமாக நினைத்துக்கொண்டார்.  


கோபுரம், ராஜகோபுரம், பிராகாரங்கள், மண்டபங்களை திருப்பணி செய்து சீரமைத்தார். கும்பாபிஷேகத்திற்கு புரோகிதர்களை அமர்த்தி வேத மந்திரங்கள் முழங்க திருக்குடத்தை ஊர்வலமாக எடுத்துவந்து கும்பாபிஷேகம் நடத்தி, கருவறையில் உறையும் இறைவனை வணங்குவதுபோல் தனது சிந்தனையை ஓடவிட்டார்.


அந்த சிந்தனையினூடே அவர் மண்டபத்தின் மேற்பகுதியைப் பார்த்தபோது, அங்கே அவரது தலைக்குமேல் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து அவரை கொத்த தயாராக இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வினாடி கூட தாமதிக்காமல் அம்மண்டபத்தை விட்டு வெளியே ஓடினார்.


இவர் வெளியே வந்தது தான் தாமதம், அடுத்த நொடி ஒரு பேரிடி விழுந்து அந்த மண்டபம் இருந்த பகுதி அப்படியே நொறுங்கி தூள் தூளானது. அதில் ஒரு கல்லானது இவர் கால் மேல் விழுந்து தெறிக்க சிறு காயத்துடன் இவர் தப்பினார். நாகத்தை கண்ட அதிர்ச்சியிலிருந்தே மீளாத அந்த தொழிலாளி மேலும் அதிர்ச்சியில் உறைந்துபோனார். அப்போது சரியாக இரவு ஏழரை மணி.


வீட்டுக்கு சென்று தன் மனைவி மக்களிடம் தான் தப்பித்த கதையை திகிலுடன் கூறினார்.


மறுநாள் மாலை வழக்கம்போல ஜோதிடரை சந்திக்க சென்றார். தொழிலாளியை பார்த்த ஜோதிடருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.  


அவரை வரவேற்று அமரவைத்துவிட்டு ஒருவேளை தான் சரியாக பலன் கணிக்கவில்லையா என்ற சந்தேகத்துடன் மீண்டும் அந்த தொழிலாளியின் ஜாதகத்தை ஆராய்ந்தார்.!


ஜோதிட நூல்களை, ஓலைச் சுவடிகளை மீண்டும் புரட்டினார். அவர் கணக்கு சரியாகவே இருந்தது. பின் அவர் எப்படி பிழைத்தார்?  


இதுபோன்ற கண்டத்திலிருந்து தப்பிக்கவேண்டுமென்றால், அந்த நபர் சிவன் கோவில் ஒன்றைக் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் பெற்றிருக்கவேண்டும் என்று ஜோதிட நூல்களில் பரிகாரம் குறிப்பிடப்பட்டிருந்தது.!  


ஆனால் இவரோ பரம ஏழை. அந்த பரிகாரத்தை இவர் சொல்லியிருந்தாலும் அதை இவரால் செய்திருக்க முடியாது. இவரால் எப்படி கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யமுடியும்? அதுவும் ஒரு இரவுக்குள்? இப்படி பலவாறு சிந்தித்தபடி, “நேற்றிரவு என்ன நடந்தது?” என்று அந்த தொழிலாளியிடம் கேட்டார்.


தொழிலாளி தான் சென்றபோது மழை பெய்ததையும், அப்போது மழைக்கு ஒரு பாழடைந்த சிவாலயத்தின் பக்கம் தான் ஒதுங்கியதையும் கூறினார்.


மேற்கொண்டு என்ன நடந்தது.? என்று ஜோதிடர் ஆர்வத்துடன் கேட்க, இவர் அந்த சிதிலமடைந்த ஆலயத்தை பார்த்த வருத்தமுற்றதாகவும், பணமிருந்தால் கும்பாபிஷேகம் செய்து வைக்கலாமே என்று தான் கருதியதாகவும் கூறினார்.


ஜோதிடருக்கு அடுத்த நொடி அனைத்தும் விளங்கிவிட்டது. இந்த தொழிலாளி மனதளவில் செய்ய நினைத்த சிவாலய புனருத்தாரனமும் கும்பாபிஷேகமுமே அவருக்கு முழுமையான பலன்களை தந்து ஈசனருளால் அவரது விதி மாற்றி எழுதப்பட்டதை உணர்ந்துகொண்டார்.


இது உங்களுக்கு மறுஜென்மம். அதுவும் ஈசன் கொடுத்த ஜென்மம். இனி உங்களுக்கு எந்தக் குறையும் இருக்காது போய் வாருங்கள்என்று அவரை வழியனுப்பி வைத்தார்.


ஆக, போகிற போக்கில் நம்மிடம் தோன்றும் நல்ல சிந்தனை கூட நமது விதியை மாற்ற வல்லவை. எனவே எப்போதும் நல்லதையே நினைக்கவேண்டும். 

அந்த தொழிலாளிக்கு அடிப்படையிலேயே நல்ல சிந்தனையும் பக்தியும் இருந்ததால் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் அப்படி ஒரு சிந்தனை தோன்றி அதன் மூலம் விதி மாற்றி எழுதப்பட்டது.!


திருச்சிற்றம்பலம்

அவனருளாலே

எல்லாம் சிவன் செயல்


சிவபுண்ணியம் என்பது மிக மிக எளிமையானது. ஆனால், தலையெழுத்தையே மாற்றவல்லது. 

அந்த தொழிலாளி அன்றிரவு இடி தாக்கி மரணமடையவேண்டும் என்பது விதி.! ஆனால் அவர் மனதால் செய்த சிவபுண்ணியம் அவரை கடைசி நேரத்தில் காப்பாற்றிவிட்டது !


இதன் பெயர் தான் வினை சுருங்குதல். அதாவது அனுபவித்தே தீரவேண்டும் என்ற விதியை மாற்றுவது.! தலைக்கு வருவதை தலைப்பாகையோடு போகச் செய்யும் சக்தி சிவபுண்ணியத்துக்கு உண்டு..!!


ஊர்கூடி சீரமைப்போம் குழுவின் வாட்ஸ்அப் லிங்க்


சிவாயநம இறைவன்  கருணையால் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து மதுராம்பட்டு மீனாட்சி சுந்தர சொக்கநாதர் கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் செய்ய எண்ணம் கொண்டிருக்கிறோம். பழனியப்பன் அவர்கள் இந்தக் கோவிலை சீரமைக்க 30 லட்சம்  தேவைப்படும் என்று தனது ஆடியோ பதிவில் சொல்லி இருந்தார்கள். 30 லட்சம் என்றவுடன் மிகவும் மலைப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒரு  3000 அடியவர்கள் ஒன்று சேர்ந்தால் மாதம் 100 ரூபாய் கொடுத்தால் ஒரு மாதத்திற்கு 3 லட்ச ரூபாய்க்கு திருப்பணி செய்ய முடியும். இப்படி 3000 அடியவர்கள் மாதம் மாதம் 100 ரூபாய் கொடுத்தால், ஒரே வருடத்தில் கண்டிப்பாக இந்தக் கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் காண முடியும். எனவே இந்த குழும அடியவர்கள் அனைவரையும் அன்புடனும், பணிவுடனும் கேட்டுக் கொள்வது, நமது வாட்ஸ்அப் குழும லிங்கை உங்கள் நண்பர்கள் சுற்றத்தினர் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். பணக்காரர்கள் மட்டும்தான் திருப்பணி  செய்ய வேண்டும் என்பது இல்லை. திருச்செந்தூர் கோவில் ஆண்டிகளால் கட்டப்பட்டது என்று சொல்வார்கள். திருப்பணி செய்ய நாம் ஆயிரம் ஆயிரமாக கொடுக்க வேண்டும் என்பது கிடையாது. எந்த ஒரு கோவில் தேரும்  தனிப்பட்ட சில மனிதர்களால் இழுக்கப்பட்டதாக வரலாறு கிடையாது. நமக்கு இங்கு தேவை ஆயிரக்கணக்கான அடியவர்கள் இணைவதுதான். அப்படி இணைந்தால் கண்டிப்பாக நம்மால் வெகு சீக்கிரம், இந்த கோவிலை எழுப்பி கும்பாபிஷேகம் காண இயலும். ராஜராஜ சோழன் இடம் இறைவன் சொன்னது, இடைச்சி நிழலில் சுகமாய் இருக்கிறேன் என்று. எனவே இறைவன் மேல் உண்மையான அன்பு கொண்டு, அடியவர்கள் அனைவரும் ஒன்று சேர்வோம். ஊர் கூடி தேர் இழுப்பது போல, ஊர்கூடி மதுராம்பட்டு மீனாட்சி சுந்தர சொக்கநாதர் கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் செய்வதற்கு, அடியவர்களை  ஒன்று சேர்ப்போம். அனைவரும் இணைந்து இந்தத் திருப்பணியை இறைவன் திருவருளால், அன்புடன் செய்வோம். நமது ஊர் கூடி சீரமைப்போம் குழும லிங்கை அனைவருக்கும் பகிருங்கள் நமது நோக்கத்தையும் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். நன்றி, சிவாயநமஓம் நமசிவாய


 https://chat.whatsapp.com/EAHHW22NMTEJTKkzTDQGoe


சிவாயநம திருச்சிற்றம்பலம்

Comments

Popular posts from this blog

April 2021 Contribution as per bank statement   சிவாய நம ஏப்ரல் மாதத்தில் நம்முடைய குழு அடியவர்களால் கொடுக்கப்பட்ட நன்கொடை தொகை, வங்கிக் கணக்கில் பட்டியல் படி கொடுக்கப்பட்டிருக்கிறது. வங்கிக் கணக்கு பட்டியல் படி கொடுக்கப்பட்டிருப்பதால் எந்தக் கணக்கில் இருந்து அடியவர்கள் பணம் அனுப்பினார்கள் அந்த கணக்கின் பெயர் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும். சில அடியவர்கள் தங்களுடைய நண்பர்கள் உறவினர்கள் மூலம் அனுப்பி இருப்பார்கள். அந்த நண்பர்கள் உறவினர்களின் பெயர்தான் வங்கிக் கணக்கில் இருக்கும். எனவே அவர்களின் பெயர்தான் இந்த பட்டியலில் இருக்கும். இந்தப் பட்டியல் அடியவர்கள் அனைவரும் அனுப்பிய நன்கொடை தொகை வந்து சேர்ந்து விட்டது என்று தெரிய படுத்துவதற்கான வங்கிக் கணக்கு பட்டியல். சிவாய நம                   30/04/2021        V MATHIVANAN        116 30/04/2021        V MATHIVANAN        1,000.0...

மதுராம்பட்டு மீனாட்சி சுந்தர சொக்கநாதர் கோவிலுக்கு பங்களிப்பு கொடுத்தவர்களின் விபரங்கள் ( As per Bank Statement)

Date Devotees Name Contribution Amount 31/03/2021 SURESH KUMAR B 100 31/03/2021 Mr R NAGARAJAN 101 31/03/2021 MURUGAPP 1,001.00 31/03/2021 PADMAJA 502 30/03/2021 MADHUSUD 1,001.00 30/03/2021 SAVEETHA 1,200.00 29/03/2021 Paid To Palaniyappan 150000 29/03/2021 Bank Charges 16.52 29/03/2021 Paid to Last Rites Gangatharan 4,000.00 29/03/2021 Bank Charges 2.36 29/03/2021 Paid to Gosalai as Advance 30,000.00 29/03/2021 Bank Charges 4.72 28/03/2021 KANDHA VADIVELAN G 501 27/03/2021 200 27/03/2021 SHANTHI N 1,000.00 26/03/2021 Customer 1,001.00 26/03/2021 A.VALLIAMMAI 100 26/03/2021 S JAIGAN 1,111.00 26/03/2021 VADIVELU 500 26/03/2021 Mr. SIVAGURUNATHAN S 5,001.00 26/03/2021 501 25/03/2021 Lakshmi Chidambaram 1,000.00 25/03/2021 Lakshmi Chidambaram 1,000.00 25/03/2021 W.E.SAMPATH KUMAR 200 25/03/2021 RASHMI S R 1,000.00 25/03/2021 Gana Soundrai 1,001.00 25/03/2021 Cash Chennai Porur branch 150 25/03/2021 THIRUNAV 1,000.00 25/03/2021 Mr Malini D 501 25/03/2021 Mr Malini D 1,000.00 24/03/2021 A...

ஆன்மா குறித்து இறைவனின் வழிகாட்டுதல் ! - பகுதி 1

  செஞ்சி பாணம் பாக்கம் கைலாசநாதர் கோவில், திருப்பணி மூலம் இறைவன் எத்தனை எத்தனை ஆன்மாக்களை மனநிறைவு என்கின்ற ஒரு விஷயத்தை நோக்கி பயணம் செய்யுமாறு திசைதிருப்பி விட்டிருக்கிறார் என்பதை பதிவு செய்ய ஆசைப்பட்டதால் இந்த ஒரு பதிவு.. அவ்வாறு பதிவு செய்யும் முன்னர், ஆன்மா என்பது குறித்து சில விஷயங்களை பேசுவோம், பிறகு கடவுள் எவ்வாறு நமக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறார் நம்முடன் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்பதை பார்ப்போம்.  மனதில் உணர்ந்த அத்தனை விஷயங்களையும்  வார்த்தைகளால் கொண்டுவர முடியுமா என்றால் தெரியவில்லை ஆனால் இங்கே ஒரு முயற்சியை மேற்கொள்ளலாம் என்கின்ற எண்ணத்தில் இந்த பதிவு பதிவிடப்படுகிறது. இந்தப் பதிவு வாட்ஸப்பில் மிகப்பெரிய பதிவாக இருக்கும் என்பதினால் இதனை இணையதளத்தில் பதிவு செய்து அதற்குரிய இணையதள லிங்க் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் அனைத்து விஷயங்களையும் கொடுக்க முடியாது என்பதினால் முடிந்த போதெல்லாம் பதிவு செய்து அதற்குரிய இணையதள லிங்க் குழுவில் பகிர்ந்து கொள்ளப்படும். இந்தப் பதிவின் மூலம் ஏதேனும் ஒரு சில அடியவர்களுக்கு ஆன்மா குறித்த ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது ...